கணினி டிப்ஸ்


வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க மென்பொருள்! 

நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து எடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT, WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3 போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும். இது ஒரு இலவச மென்பொருள். இதில் நீங்கள் குறிப்பிடும் வீடியோவின் முன்னோட்டத்தை பார்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேமித்துக்கொள்ளலாம். முக்கிய விஷயம் என்ன என்றால் வீடியோவில் இருக்கும் படம் அல்லது பாடலின் தரம் நீங்கள் மாற்றிய பின்னும் ஒரே வகையில் இருக்கும். இதன் தரவிறக்க அளவு 3.8 MB மட்டுமே. Download Link Download As PDF

 

 

விண்டோஸ் XP பூட் ஆகாத கணினியை சரி செய்ய!

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளது போன்ற பிழைச்செய்தி கருப்புத் திரையில் வந்திருக்கலாம்.

Windows could not start because the following file missing or corrupt:

\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

You can attempt to repair this file by starting Windows Setup using the original Setup CD-ROM.

Select ‘r’ at the First screen to start repair.

அல்லது என்றோ பிழைச் செய்தி வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே செய்தி தொடர்ந்து வரும். safemode சென்றாலும் இதே நிலைதான்.

இந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம்.

முதலில் வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE என வருகிறதா? அல்லது \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM என வருகிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM).

இந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும்.

ஒரு வேளை உங்கள் கணினியில் இந்த வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள Repair திரை வரும் வரை தொடருங்கள்.

இந்த திரையில் ‘R’ கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.

மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,

1: C:\WINDOWS

(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)

இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,

C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM

COPY C:\WINDOWS\REPAIR\SYSTEM C:\WINDOWS\SYSTEM32\CONFIG

(Corrupt ஆன FILE SYSTEM ஆக இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFTWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப் போலவும் கொடுக்கவும். இதில் ‘C:’ என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில் இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

COPY C:\WINDOWS\REPAIR\SOFTWARE C:\WINDOWS\SYSTEM32\CONFIG

பிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும். Source Download As PDF

 

 

விண்டோஸ் XP பூட் ஆகாத கணினியை சரி செய்ய!

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளது போன்ற பிழைச்செய்தி கருப்புத் திரையில் வந்திருக்கலாம்.

Windows could not start because the following file missing or corrupt:

\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

You can attempt to repair this file by starting Windows Setup using the original Setup CD-ROM.

Select ‘r’ at the First screen to start repair.

அல்லது என்றோ பிழைச் செய்தி வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே செய்தி தொடர்ந்து வரும். safemode சென்றாலும் இதே நிலைதான்.

இந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம்.

முதலில் வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE என வருகிறதா? அல்லது \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM என வருகிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM).

இந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும்.

ஒரு வேளை உங்கள் கணினியில் இந்த வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள Repair திரை வரும் வரை தொடருங்கள்.

இந்த திரையில் ‘R’ கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.

மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,

1: C:\WINDOWS

(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)

இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,

C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM

COPY C:\WINDOWS\REPAIR\SYSTEM C:\WINDOWS\SYSTEM32\CONFIG

(Corrupt ஆன FILE SYSTEM ஆக இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFTWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப் போலவும் கொடுக்கவும். இதில் ‘C:’ என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில் இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

COPY C:\WINDOWS\REPAIR\SOFTWARE C:\WINDOWS\SYSTEM32\CONFIG

பிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும். Source Download As PDF

 

 

கணினியின் வேகம் அதிகரிக்க டிப்ஸ்!

கணினியின் இயக்க வேகத்தை எப்படி அதிகரிப்பது. சாதரணமாக கொஞ்சம் பணம் செலவழித்தால் கணினியின் வேகத்தை திறம்பட செயல்படும் வகையில் மாற்ற முடியும் ஆனால் எல்லோராலும் பணம் செலவழிக்க முடிவதில்லை அதற்காக தான் இந்த சிறிய டிப்ஸ் இது உங்கள் எல்லோருக்குமே தெரியும் ஆனாலும் இது பற்றி தெரியாத நண்பர்கள் இருக்ககூடும்.

டீபிராக்மெண்ட் இது கணினியை டீபிராக்மெண்ட் செய்வதற்கானது இது நமது கணினியில் இந்த வசதி இருக்கிறது ஆனால் நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும் இந்த டீபிராக்மெண்ட் எதற்காக என நினைக்கும் நண்பர்களுக்காக சின்ன தகவல் நாம் கணினியில் பதியும் தகவல்கள் எல்லாம் ஒரே இடத்தில் பதிந்து வைக்கபடுவதில்லை ஒரு பைல் பல்வேறு இடங்களில் பிரித்து பதியப்படும் அதாவது நமது வண்தட்டு பல்வேறு கிளஸ்டர்களாக பிரிக்கப்பட்டிருக்கும் நாம் டீபிராக்மெண்ட் செய்கையில் பல இடங்களில் இருக்கும் பைல்களை எடுப்பதற்கு வசதியாக ஒருங்கினைக்கும் வேலையை தான் இந்த டீபிராக்மெண்ட் செய்கிறது. Download Defraggler

இது கணினியில் இருக்கும் தேவையில்லாத ரிஜிஸ்டரியை அழகாக கிளீன் செய்து விடும் உதாரணமாக நீங்கள் உங்கள் கணினியில் ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்து மீண்டும் அன் இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள் ஆனால் நீங்கள் அன் இன்ஸ்டால் செய்த புரோகிராமை ரிஜிஸ்டரியில் தேடிப்பார்த்தால் இருக்கும் அதை நீக்குவதற்காகத்தான் இந்த மென்பொருள் உங்களுக்கு தெரியும் கணினியின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த ரிஜிஸ்டரி வழிதான் மேற்கொள்ள படுகிறது நாமாக மாற்றங்கள் செய்ய நினைத்து தவறு நேர்ந்தால் கணினியின் இயக்கமே நின்று விடும் ஆனால் சிசி கிளீனர் உபயோகிக்கையில் அந்த பிரச்சினை வராது மேலும் சில நேரங்களில் Recycle Bin ல் சில பைல்களை அழிக்க முடியாமல் இருக்கும் அதையும் இந்த சிசி கிளீனர் கொண்டு அழித்து விடலாம். Download CC Cleaner.

CCleaner கணினியில் இருந்தால் கண்டிப்பாக CCEnhancer மென்பொருளும் வேண்டும். நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அகற்றி நம் கணினியை சுத்தமாக வைத்திருக்க நாம் அனைவரும் உபயோகிக்கும் இலகுவான ஒரு மென்பொருள் CCleaner. இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இருந்தால் கூடவே கண்டிப்பாக இந்த CCEnhancer மென்பொருளும் வைத்து கொள்ளுங்கள். இந்த மென்பொருள் கூட இருந்தால் CCleaner-ன் பயன்பாடும் மேலும் அதிகரிக்கிறது.

இந்த மென்பொருள் சுமார் 270 புதிய வகைகளை சப்போர்ட் செய்ய கூடியது. இதை நம் கணினியில் நிறுவினால் ஒவ்வொரும் முறையும் நம் கணினியில் CCleaner அப்டேட் செய்ய வேண்டியதில்லை. இதில் உள்ள Download Latest பட்டனை அழுத்தியவுடன் தானாக டவுன்லோட் ஆகி விடும்.  மென்பொருள் நம் கணினியில் இருந்தால் CCleaner ஸ்கேன் செய்யும் மென்பொருட்கள் அதிகமாகும்.

இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம்.  இந்த மென்பொருள் உங்கள் கணினியில் வேலை செய்ய உங்கள் கணினியில் Microsoft .NET framework 3.5 உங்கள் கணினியில் இருப்பது அவசியம்.

Download CCEnhancer இந்த பட்டனை அழுத்தி மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். தரவிறக்கி மென்பொருளை ஓபன் செய்யுங்கள். ஓபன் செய்து Download Latest என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் CCleaner மென்பொருள் அப்டேட் ஆகும்.

இந்த மென்பொருளை ஓபன் செய்து விட்டு CCleaner ரன் செய்யுங்கள் அதில் ஸ்கேன் ஆகும் மென்பொருளின் எண்ணிக்கை அதிகரிக்க பட்டிருப்பதை காண்பீர்கள்.
 
கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது. இதனை இயக்க, நமக்கு தொழில் நுட்ப உத்திகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இதன் பெயர் ஸ்லிம் கிளீனர் (Slim Cleaner). இதன் சோதனைத் தொகுப்பு தான் இப்போது வந்துள்ளது. இருப்பினும் செயல்பாட்டில் எந்த குறையும் இல்லாமல் இது பயனுள்ள முறையில் இயங்குகிறது.

இந்த வகையில் ஏற்கனவே பலருக்குத் தெரிந்த தொகுப்பான CCleaner போலவே இந்த புரோகிராமும் செயல்படுகிறது. சுத்தப்படுத்துவதற்கென நீக்கப்படும் டேட்டாவினை Windows, Applications மற்றும் Browsers என்ற மூன்று பிரிவுகளில் காட்டுகிறது. இந்த டேப்கள் மேலும் சில பிரிவுகளாக (Windows History, Productivity மற்றும் FileSharing) அமைக்கப் படுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் ஒரே புரோகிராமில் உள்ள தேவையற்ற டூப்ளிகேட் டேட்டாக்கள் காட்டப்பட்டு நீக்கப்படுகின்றன. Analyze என்ற பட்டனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் முழுமையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இறுதியில் ஒவ்வொரு புரோகிராம் பிரிவிலும், நீக்கப்பட வேண்டிய டேட்டா காட்டப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் டேட்டாவினைப் பார்த்திடாமல், நேரடியாகவே அனைத்து வேண்டாத டேட்டாக்களையும் நீக்கும் வழியும் உள்ளது. இதில் Services உள்ள டேப்பில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து சேவை வசதிகளும் பட்டியலிடப்பட்டு, அவை அப்போது எந்த நிலையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று காட்டும்.

புரோகிராமின் restore டேப், நாம் தேவையில்லாமல் ஏற்படுத்திய மாறுதல்களை நீக்கி, அவற்றிற்கு முன் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கொண்டு செல்லும். இதில் உள்ள uninstaller புரோகிராம், கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்களை, முழுமையாக எந்த மிச்ச பைலும் இன்றி நீக்குகிறது. அதே போல இதில் தரப்படும் file shredder வசதி, ஒரு பைலை, மீண்டும் யாரும் எடுக்க முடியாதவகையில், அழிக்கிறது.

Windows Tools என்னும் வசதி, விண்டோஸ் கண்ட்ரோல் பேனல் மற்றும் சிஸ்டம் தரும் வசதிகளைத் தருகிறது. அந்த சிஸ்டம் பிரிவுகளில் பார்க்கும் அனைத்து வேலைகளையும் இதன் மூலமும் மேற்கொள்ளலாம். இந்த புரோகிராமினை http://http//slimcleaner.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக, டவுண்லோட் செய்திடலாம்.

நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி Software Registery -ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த Game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் . நாம் அதனை Remove செய்தாலும் அந்த Instructions நமது கணினியிலேயே தங்கிவிடும். ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த Instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே Delete செய்துவிட்டோம். எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு Registry Error என்று பெயர் . இவ்வாறு பல Software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் . இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் Free Registry Cleaner Software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம். Free Registry Cleaner Software

6.அடுத்ததாக அதிகம் பேர் செய்யும் ஒரு தவறு இருக்கிறது நம்முடைய அவரத் தேவைக்காக பெரும்பாண்மையான பைல்களை நாம் கணினியின் டெஸ்க்டாப்பில் வைப்போம் இதனால் எப்படி கணினியின் இயக்கம் குறையும் என பார்த்தால் நமது விண்டோஸ் இயங்குதளம் சாதரணமாக டிரைவ் C- ல் பதியப்படுகிறது இதில் டெஸ்க்டாப் விண்டோஸின் இயங்கு தளத்தில் இருக்கிறது அதனால் இயங்குதள சம்பந்தமில்லாத பைல்கள் அதிகமாக டிரைவ் C -ல் வரும்போது அதன் வேகம் தானகவே குறையும் இதற்கு ஒரு மாற்று வழி கணினியை பார்மட் செய்யும்போது மூன்று டிரைவ்களாக பிரித்து வைக்கவும் இதில் C- ல் நமது இயங்குதளத்தை பதியவும் D-ல் நாம் இயக்க விரும்பும் பல்வேறான புரோக்கிராம்களை பதிந்து கொள்ளவும் E-ல் நமது புரோக்கிராம் அல்லாத நமது பைல்களை சேமித்து பயன்படுத்தவும் இதனால் இயங்கு தளத்தின் வேகம் குறையாமல் இருக்கும் டெஸ்க்டாப்பில் வைக்க விரும்பும் பைல்களுக்கு ஷார்ட்கட் கொடுத்து பயன்படுத்தவும் ஒருவேளை ஷார்ட்கட் ஐகான் பிடிக்கவில்லை என்றால் ஆரோவை நீக்கலாம் பார்க்கவும்.

7.அடுத்ததாக Start -> Run -> Type msconfig என அடித்து எண்டர் கொடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Startup டேப்பை திறந்து அதில் இருக்கும் எல்லாவற்றையும் Disable செய்து விடவும் வேண்டுமானால் Anti Virus மென்பொருள் மட்டும் Enable செய்து கொள்ளவும் இதனால் கணினியின் Boot நேரம் குறையும்.

8.இனி வாரம் ஒரு முறையாவது Start -> Run -> Type temp என அடித்து எண்டர் கொடுத்து அதில் இருக்கும் பைல்களை அழித்து விடவும், மீண்டும் Start -> Run -> Type %temp% என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும் , அடுத்ததாக Start -> Run -> Type prefetch என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும்.

9.இன்னும் ஒரு சிறிய தகவல் மட்டும் நம் தேவைக்காக இனையத்தில் கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள்களை தரவிரக்கி நம் கணினியில் பதிந்து வைத்திருப்போம் அப்படி பதிந்த புரோக்கிராம்கள் மீண்டும் அவசியமில்லை என்றால் மறக்காமல் அன்இன்ஸ்டால் செய்து விடவும் அப்படி உள்ள புரோகிராம்களை முழுவதுமாக நீக்க அன் இன்ஸ்டாலர் உபயோகிக்கவும். Download Revo Uninnstaller.

 

 

ரெகவர் பைல்ஸ் அழித்த பைல்களை மீட்க ஒரு புரோகிராம் ‎

நாம் சில வேளைகளில் தேவையான பைல்களை நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். அவை ரீசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயைப் பயன்படுத்தி ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் சில பைல்களை துவம்சம் செய்துவிடுவோம். பின் வருத்தப்படுவோம்.

இவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டுபிடித்து எடுத்துத்தரவென்றே பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover Files.  Link to Download.

ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேயடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் நீக்கிவிடலாம். மிகச் சிறிய ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது. NTFS மற்றும் FAT ஆகிய இருவகை பார்ட்டிஷன்களில் அழித்த பைல்களை இது மீட்டுக் கொடுக்கிறது. இந்த புரோகிராமின் அளவு 1189 கேபி மட்டுமே என்பது இதன கூடுதல் சிறப்பு. எதற்கும் இதனை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல் Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை. பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த File-களை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த File-களை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் File-களை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார்களில் (Sector) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு File நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த File-கள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்கவில்லை எனில் வேறு File-கள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம். R-Linux Recovery.

இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ, Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம். இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள் File-களை மீட்கலாம். இது போல மற்ற இலவச மென்பொருள்கள்

 

 

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்


     மாணவர்கள் தாங்கள் சேரப் போகும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் பட்ட வகுப்புகள் குறித்து பலவகைகளிலும் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சேரப் போகும் பாடப்பிரிவுகளில் என்னவெல்லாம் பாடங்கள் இருக்கும், இவற்றிற்கான நூல்களை எங்கு வாங்கலாம் என்றும் சிந்திக்கத் தொடங்குவார்கள்.


குறிப்பாக பொறியியல் மாணவர்கள், பெரிய நகரங்களில் இயங்கும் புக் பேங்க் எனப்படும் புத்தக வங்கிகளில் பணம் செலுத்தி நூல்களைப் பெறும் வழிகளை அறிந்து அவற்றை நாடுவார்கள். அல்லது சீனியர் மாணவர்கள் படித்த நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்குவார்கள். கூடுதலாக நூலகத்தில் உள்ள நூல்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்குவார்கள்.

இவர்களுக்கு இணையமும் உதவி செய்கிறது. பல தளங்கள் நூல்களை இ–நூல்களாக, பி.டி.எப். பார்மட்டில் தருகின்றன. இவை பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து, சிடிக்களில் அல்லது பிளாஷ் ட்ரைவ்களில் பதிந்து, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். முக்கிய பக்கங்களையோ அல்லது நூல் முழுவதையுமோ, அச்சிட்டு எடுத்து வைத்துப் படிக்கலாம்.

இவ்வகையில் கீழ்க்காணும் தளங்கள் சிறப்பாக இயங்குவதனை அறிய முடிந்தது. அவை இலவசமாக நூல்களைத் தரும் தளம் இது. எத்தனை நூல்களை வேண்டு மானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ–புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ–புக் இந்த தளத்தில் இல்லையா? இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைத் தேடி, எடுத்து பதிந்துவிடுவார்.

www.ebooklobby.com என்ற முகவரியில் உள்ள இந்த தளம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த தளத்தில் நூல்கள் அருமையாக வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம். பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இந்த தளங்களை நாடித் தாங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தர இந்த நூல்களை நாடுகின்றனர். பன்னாட்டளவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் நூல்களை இந்த தளங்கள் வழங்குவதால், ஒரு பொருளில் மிகச் சிறந்த கருத்துக்கள் மாணவர்களுக்கு இந்த நூல்கள் வழியாகக் கிடைக்கின்றன. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் இவை. தகவல் Download As PDF