Wednesday, March 30, 2011

Monday, March 28, 2011

பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தும் : இம்ரான் கான்!


 
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"பழைய வரலாறுகளை வைத்து யார் வெற்றிபெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது. சமீபத்திய ஆட்டங்களை வைத்துப் பார்க்கும்போது இந்திய அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. இதுவரை போட்டியை நடத்திய நாடுகள் கோப்பையை வென்றதில்லை. என்றாலும், இந்த முறை அதற்கான வாய்ப்புள்ளது. 
பாகிஸ்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும் இதுபோன்ற சிறந்த வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைக்காது. சமீபத்திய சாதனைகளைப் பார்க்கும்போது இந்தியா பலம் வாய்ந்த அணியாகும். இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கும். இந்த வாய்ப்பு அடுத்த உலகக் கோப்பையில் கிடைப்பது கடினம். 
பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தோனியே சிறந்த கேப்டன். டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என அனைத்து ஆட்டங்களுக்கும் இந்திய அணிக்கு அவரே கேப்டன். ஆனால் அப்ரிதி டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கிடையாது. ஒருநாள் போட்டியைவிட டெஸ்ட் போட்டி நெருக்கடி மிகுந்தது. டெஸ்ட் கேப்டனாக இல்லாதபட்சத்தில் ஒருநாள் போட்டியில் நெருக்கடியைச் சமாளிப்பது கடினமாகும்" என்று கூறியுள்ளார்.

நன்றி :இந்நேரம் .காம்

Saturday, March 26, 2011

கட்டத்துரை விஜயகாந்தும், கைப்புள்ள வடிவேலுவும் - அன்றைய அலப்பறை.


 
 ஒரு காமெடியனை ஹீரோவாகும் முயற்சியா இல்லை ஒரு ஹீரோவை காமெடியனாக்கும் முயற்சியா என இதுவரை அந்த அலப்பறைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

திருவாரூரில் நடைப்பெற்ற திமுகவின் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டத்தில் பேசிய வடிவேலு, ஆரம்பத்தில் ஆளுங்கட்சியின் திட்டங்கள் பற்றி பேசிய போது சாதாரணமாகத்தான் இருந்தது.

இப்ப நான் மேட்டருக்கு வரேன் என விஜயகாந்த் பற்றி ஆரம்பித்த
கொஞ்சநேரத்தில், திமுக தலைமை அவரை எப்படி பயன்படுத்த இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமானது.

தியாகங்கள் எதுவுமே செய்யாமல், நேற்று  கட்சி தொடங்கி , (அந்த கட்சி பேரு என்ன?  நாக்கமூக்கவா?) இன்று தேர்தலை சந்தித்து, நாளை ஆட்சியைப்பிடித்து முதல்வர் ஆகிவிடுவேன் என்று  நினைக்கிறார் விஜயகாந்த் என்று ஆரம்பித்த வடிவேலு அதன்பிறகு பேசியதெல்லாம் ஏகவசனம் தான்.

"தண்ணிய போட்டா நீ என்ன வேணா பேசலாமா?
நீ முதல்வர்னா நான் பிரதமர்... நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி
நீ பிரதமர்னா நான் ஒபாமா"
என  வடிவேலு அள்ளி வீச, முதல்வர், ஸ்டாலின், அழகிரி உள்பட எல்லோரும் சிரித்தனர். சினிமாக்காரங்களே ஆகாது-னு சொன்ன நம்ம ராமதாஸ் கூட சிரிச்சுட்டார்னா பாத்துக்கோங்களேன்...
(நல்லவேள நீ ஒபாமா-னா நான் பின்லேடன் அப்படினு சொல்லல... )  

தண்ணில போற கப்பல் இருக்கறவனுக்கு பேரு கேப்டன்-னு பேரு..
எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?

இது வடிவேலு சொன்னதன் ஹைலைட்.

தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை நடைப்பெற்று கொண்டிருந்தபோது, வெளியே காத்திருந்த நிருபர்கள் கேட்டா, முதல் ரவுண்டு, இரண்டாவது ரவுண்டு அப்படினு அடுக்கிட்டே போனாங்க... கடைசியா ஒன்பதாவது ரவுண்ட் முடிஞ்சதுக்கு பின்னாடி மொத்தமா ஃபிளாட்-னு சொன்னாங்க.. இது தான் நீ பேச்சுவார்த்தை நடத்துற லட்சணமா?

ஒன்ணரை ரூபாய்க்கு கண்ணாடி வாங்கி போட்டுட்டு, இரண்டரை ரூபாய்க்கு தொப்பிய வாங்கி போட்டுட்டா நீயெல்லாம் எம்ஜியாரா? இதுல கறுப்பு எம்ஜியாருனு பேரு வேற...

நான் கறுப்பு நேரு-னு  சொல்லிட்டு போயி சீட்டு கேட்டா சோனியா அம்மா சீட்டு குடுக்குமா?


41 சீட்டை வெச்சிட்டு எப்படி நீ முதலமைச்சர் ஆக முடியும்???

இதெல்லாம் வடிவேலு, வெடிவேலுவாய் மாறி  கேட்ட கேள்விகள்..
                           


திருவாரூர் கூட்டத்தில் வடிவேலு களமிறக்கப்பட்டதன் பின்ணணி:
* தனது சொந்த பிரச்சனையின் போது, தமிழகத்தில் எங்கே போட்டியிட்டாலும் விஜயகாந்தை எதிர்த்து களமிறங்குவேன் என சொல்லியிருந்த வடிவேலுவை எல்லா தொகுதிகளிலும் பயன்படுத்துவதுதான் திமுகவின் திட்டம்.

*தன் மதுரைக்கார பேச்சால் விஜயகாந்தின் வண்டவாளங்களை, மேடையில் ஏற்றுவது தான் வடிவேலுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட்.

*விஜயகாந்திற்கு அதிகம் செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் தென்மாவட்டங்களில், வடிவேலு மூலம் விஜயகாந்தை டேமேஜ் செய்வது தான் அழகிரியின் திட்டம்.

* நீ, வா, போ என்பது ஒரு கட்டத்தில் லூசு என நீண்டது வடிவேலுவின் அரசியல் பரிமாணத்தின் வளர்ச்சியோ?

*தமிழக அரசியல் மேடைகளில்  அடுத்த எஸ்.எஸ்.சந்திரனாகவோ அல்லது வெற்றி கொண்டானாகவோ இனிவரும் நாட்களில் வடிவேலுவை காணலாம்.

*அரசியல் மேடைகளில் தனிமனித தாக்குதல் சரியா, நாகரீகமா என
கேள்வி எழுப்புபவர்கள் அன்று மேடையில் இருந்தவர்களை விட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாக இருந்தால் மட்டும் பின்னூட்டதில் ருத்ர தாண்டவம் ஆடலாம். மற்றவர்கள் கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனத்தை சொல்லி ஆறுதல் பெற்றுக்கொள்ளவும்.

*அதெல்லாம் சரிங்க, தன்னை கறுப்பு எம்ஜியார் அப்படினு சொல்லிக்கொள்ளும்  விஜயகாந்துடன், , எம்ஜியார் ஆரம்பித்த கட்சியை நடத்துபவர்கள் கூட்டணி வைத்திருப்பது என்ன லாஜிக்? (விஜயகாந்த் ,கறுப்பு எம்ஜியார் என்பதை ஒத்துக்கொள்கிறதா அதிமுக?)

நன்றி -http://bharathbharathi.blogspot.com/2011/03/blog-post_25.html

Monday, March 7, 2011