Tuesday, April 19, 2011

ஐன்ஸ்டீனும் நீங்களும் ஒன்று தான்...!


மூளையின் கட்டமைப்பை வைத்துப் பார்த்தால் எல்லா மனிதர்களுக்கும் 94% அது ஒரே மாதிரியே இருக்கிறது. ஆம்,நம் மூளைக்கும் ஐன்ஸ்டீன் மூளைக்கும் எதாவது வேறுபாடு இருக்குமேயானால் அது அந்த 6% மீதியில் தான் இருக்க வேண்டும்.



மனித மூளை அமைப்பு (பழையது)

உலகின் மிக சிக்கலான வடிவங்களுள் ஒன்று மூளை, அறிவியல் ஆய்வாளர்களின் மூளையை கசக்கிய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்து வந்த உலகின் முதல் கணினிமயமாக்கப்பட்ட ஜீன் வரைபட நிறுவனம் ஆலன் ஹுமன் பிரைன் அட்லஸ் இத்தகவல்களை வெளியிட்டுதுள்ளது.

55 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நான்கு ஆண்டுகள் அயராத உழைப்பில்,ஆய்வில் விஞ்ஞானிகள் மனித மூளையின் செயல்களை விளக்க முற்பட்டுள்ளனர். மூளை செயல் இழத்தல்,மன நோய்கள் உள்ளிட்ட பல நோய்களும் இதன் மூலம் விரைவில் குணமாக்க ஆய்வு பயன்படும்.

முக்கியமான ஜெனிடிக் வரைபடங்கள் மூலம், மனிதனின் ஜீன்களில் குறைந்தபட்சம்  82% மூளையில் தான் இருக்கிறது என்றும், 94% எல்லா மூளைகளும் ஒரே மாதிரி என்றும் கூறி உள்ளனர். மேலும் இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள உருவ வரைபடங்கள் பிற்காலத்தில் பெறும் நோய்களை தெற்க்க உதவும் என்று அவர்கள் உறுதி தெரிவித்து இருக்கின்றனர்.

முதன்மை அலுவலர் ஆலன் ஜோன்ஸ், மூளை பல சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆர்என்ஏ,ரைபோ நியூகிளிக் அமிலம்,டிஎன்ஏ மற்றும் புரதங்கள் என ஒவ்வொரு பகிதியும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சற்றேறத்தாழ 25,00 ஜீன்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதிலிருந்து தான் இந்த மூளையின் வரைபடம் உருவானது என்று கூறி இருக்கிறார்.

இந்த அட்லஸ் ஒரு ஜிபிஎஸ் சிஸ்டம் போன்று செயல்படபோவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. மூளையின்  1000 த்திற்கும் மேலான அமைப்புகளில், நூறு மில்லியன் தகவல் புள்ளிகளை இணைத்து இருக்கும் இந்த வரைபடம் எந்த ஒரு ஆய்வாளரும் தான் விரும்பும் உயிரி-வேதிப் பகுதியை முப்பரிமானமாக உருமாற்ற உதவும்.

மூளையில் ஏற்படும் காயங்கள், மன வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இனி வெகு காலத்திற்கு நமக்கு பிரச்னைகளை தராது. மருத்துவ முறைகளில் மாற்றம் ஏற்படும், எந்த நுண்ணிய மூளையின் இடத்தில் ஊசி போட்டால்  நோய் தீரும் என்பது வரை இதன் மூலம் சாத்தியப் படுகிறது.

உலக நல வாழ்வு அமைப்பு மூளை சார்ந்த நோய்கள் 2020 இல் பெறும் பாதிப்பை உண்டாக்கும், என கூறி வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மேற்கொண்டு தகவல்கள் அறிய

மூளை வரைபடம்

Monday, April 18, 2011

எங்கள் வேட்பாளருக்கு ஓட்டுப் போடாதீர்கள்!



1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு வாக்குச் சேகரிப்பிற்காய் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. இன்றைய மத்தியப் பிரதேசம் அப்போது விந்தியப் பிரதேசம்.
அதில் ரேவா சட்டப் பேரவைத் தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரேவா சமஸ்தானத்தின் அரசரான ராவ் ஷிவ் பகதூர் சிங் (மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் சிங்கின் தந்தை).

ரேவாவில் பிரம்மாண்டமான பேரணியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த நேருவிற்கு வேட்பாளரைக் குறித்துச் சில தகவல்கள் கிடைக்கின்றது. விறுவிறுவென்று மேடையேறிப் பேசத் தொடங்கினார் நேருஜி.

"காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா முழுவதும் சட்டப் பேரவைக்கும், மக்களவைக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். நாங்கள் நிறுத்தியிருக்கும் ஒவ்வொருவரையும் நேரு தேர்ந்தெடுத்து நிறுத்தியிருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அது சாத்தியமில்லை.

அந்தந்த மாவட்டக் கமிட்டி மற்றும் பிராந்தியக் கமிட்டிகள் பரிந்துரை செய்பவர்களை டெல்லியில் ஏற்றுக் கொண்டு அறிவித்துள்ளோம். காங்கிரஸின் எல்லா வேட்பாளர்களும் அப்பழுக்கில்லாதவர்கள், தியாகிகள், தரமானவர்கள் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது.

எனக்குக் காங்கிரஸ் முக்கியம். அதைவிட எனக்கு ஜனநாயகம் முக்கியம். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கொலைகாரர்கள், குற்றப் பின்னணி உடையவர்கள், சமூக விரோதிகள், கள்ள மார்க்கெட் பேர்வழிகள், ஜாதி வெறி பிடித்தவர்கள் இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸ் வேட்பாளராகவே இருந்தாலும் தேர்ந்தெடுத்து விடாதீர்கள்.

இங்கே போட்டியிடும் ராவ் ஷிவ் பகதூர் சிங் மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கிறது. விந்தியப் பிரதேச அமைச்சரவையிலிருந்த அவர் பன்னா வைரச் சுரங்க நிறுவனத்துக்குச் சாதகமாக போலி ஆவணங்கள் தயாரிக்க 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக சற்று முன் எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.
இப்படிப்பட்டவர்களை ஜவஹர்லால் நேருவின் பிரதிநிதி என்று நினைத்துத் தேர்ந்தெடுத்தால், அது ஜனநாயகத்துக்குச் செய்யும் துரோகம். உங்களுக்குப் பிடித்தமான கட்சி நிறுத்தினாலும் வேட்பாளர்களைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்காதீர்கள்.எங்களது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவே இருந்தாலும், ராவ் ஷிவ் பகதூர் சிங் ஒரு தவறான வேட்பாளர் இவரைத் தோற்கடித்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பது உங்கள் கடமை'' பேசிவிட்டுச் சென்றார் நேரு.

ரேவா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு அதே ரேவா சிறைச்சாலையில் மன்னர் ராவ் ஷிங் பகதூர் சிங் இறந்தார்.
இந்தத் தேர்தல் களத்தில் ஒரேயொரு அரசியல்வாதியாவது இந்த நேர்மையின் ஒளியில் தென்படுகிறாரா?

தேடிப்பாருங்களேன்!

நன்றி: இந்நேரம்.காம்

Sunday, April 3, 2011

1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்

1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்




1983 மற்றும் 2011 - இந்த வருடங்களுக்கு உள்ள சிறப்பு அம்சம், நமது இந்திய அணி கிரிக்கெட் தொடரில்,உலககோப்பை கோப்பையை வென்றதுதான்.

இதை தவிர, மேலும், சில நம்ப முடியாத சிறப்பு அம்சங்கள் இந்த இரண்டு வருடங்களுக்கு இடையே உள்ளன.

முதலில், நமது இந்திய அணி கோப்பையை வென்ற வருடங்கள் மட்டுமே வேறு.

இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு இதே ஏப்ரல் 2 , சனிக்கிழமை அன்றுதான் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி, தனது முதல் உலககோப்பையை வென்றது.

1983 மற்றும் 2011 , இந்த இரண்டு வருடங்களின் முதல் நாள், அதாவது ஜனவரி முதல் தேதி, சனிக்கிழமைதான்.

1983 மற்றும் 2011 , இந்த இரண்டு வருடங்களின் கூட்டுத்தொகை 2,( 83 & 11 ).

கோப்பையை வென்ற இந்த இரண்டு முறையும், இந்திய அணி குருப் 'பி' பிரிவில், இரண்டாம் இடத்தில் இருந்தது.

இரண்டு வருடங்களிலும், நமது அணி, ஆறு ஆட்டங்களில் கலந்துகொண்டு, அதில் நான்கில் மட்டுமே வென்றுஇருக்கிறது.

1983 மற்றும் 2011 , இந்த இரண்டு உலககோப்பை தொடர்களிலும், கடைசி லீக் ஆட்டங்கள் நடந்த நாள் : மார்ச், 20. (20 - 03 - 1983 மற்றும் 20 - 03 - 2011 ).

கோப்பையை வென்ற இந்த இரண்டு தொடர்களிலும், அரையிறுதி சுற்றுக்கு முன்னால் நமது அணி மோதிய நாடு , ஆஸ்திரேலியா.

இந்த இரண்டு தொடர்களிலும், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஒரு அணி மற்ற அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது.
1983 ஆம் வருடம் நடந்த அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி, ஜிம்பாப்வே அணியையும், இந்த வருடம் இலங்கை அணி, இங்கிலாந்தையும் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கின்றன.


இந்தியா,உலககோப்பை வென்ற இந்த இரண்டு தொடர்களுக்கும் இத்தனை ஒற்றுமைகள் எப்படி வந்தன? ? இதை விதி என்பதா? நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு என்று கூறுவதா? தாமாகவே எப்படி இந்த அம்சங்கள் அமைந்து இருக்கின்றன??

What a Moment!!!



What a Moment!!!





April 2 2011 - சனிக்கிழமை இரவு. மறக்க முடியாத மேட்ச்! இந்தியா கையில் கோப்பை!

கோப்பையை வென்றதன் மூலம் பலரின் வாயை அடைத்துவிட்டார் தோனி!

பலர் என்று நான் சொல்வது எதிர் நாட் டு அணியையோ எதிர் நாட்டின் பத்திரிகையையோ அல்ல. நம்ம கூடவே இருந்துட்டு இவனுக ஆகாதுப்பா என்று புலம்புபவர்களைத்தான்!

ஏற்கனவே ஆஸியை ஜெயிச்சப்பவே, இதுக்காக ஒரு போஸ்ட் போட்டு பொங்கீட்டேன். பாகிஸ்தான் கிட்ட உங்க பப்பு வேகாதுன்னாங்க.. அதுக்கும் ஆப்பு வெச்சாச்சு. மறுபடி இலங்கைகூட ஃபைனல்ஸ்ன்னப்ப, 40%தான் இந்தியாவுக்கு சான்ஸ்னாங்க..

மார்ச் 31 அன்னைக்கு ட்விட்டர்ல 'எல்லார்க்கும் முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1. இலங்கைக்கு மட்டும் ஏப்ரல் 2’ன்னு எழுதினேன். யாரோ வந்து திட்டினாங்க.

இப்ப என்னாச்சு? சொல்லி அடிச்சோம்ல?

------------- ---------------- ------------------

தோனி!


(ஜனாதிபதி மாளிகையில் ஆட்டநாயகன் விருது + கோப்பையுடன்)

சிலர் பேசறாங்க. இவர் விளையாடாத கேப்டன்னு. தேவையே இல்லைப்பா. மேன் மேனேஜ்மெண்ட்னு ஒரு விஷயம் நான் இவர்ட்டேர்ந்து கத்துகிட்டேன். என்னா கூல்!

கீழ பாருங்க..




வின்னிங் ஷாட் அடிச்சுட்டாரா? கண்ல ஏதாவது வெறி தெரியுதா? ஒரு சின்ன ஆர்ப்பாட்டம்? ம்ஹூம்.


சரி.. இந்த ஸ்டில் பாருங்க..



பந்து சிக்ஸுக்கு போயாச்சு. யுவிக்கு தெரிஞ்சுடுச்சு. இது லைஃப் டைம் ஷாட்ன்னு. ஆனா இப்பவும் தோனி முகத்துல ஆரவாரம் இல்லை. அர்ஜூனன்யா அவன். பந்து போய் ராஜபக்ஷே மண்டைல விழுந்து கன்ஃபர்ன் ஆகறதுக்காக பார்த்துட்டே இருக்காரு!


இதுவரைக்கும்கூட ஓகே-ங்க..


இப்ப இந்த ஸ்டில் பாருங்க..




சிக்ஸும் அடிச்சாச்சு. மேட்சும் ஜெயிச்சாச்சு. யுவியால அடக்க முடியல.. ‘இப்பக் கூட கத்தமாட்டியாடா நீ’ங்கற மாதிரி தோனியைப் பார்த்து கேட்கற மாதிரியே இருக்கா?

ஆனா நம்மாளு என்னா சாவகாசமா ஸ்டிக்கை கலெக்ட் பண்றாரு.. மனுஷனாய்யா இவன்? லவ் யூ மேன்!



சச்சின்!

21 வருஷத்துக்கு மேல ஆடிகிட்டிருக்கற ரன்மெஷின். ஆனா ரொம்ப பாவம்.







சச்சினும் சரி, ரஜினிகாந்தும் சரி.. ஒரே மாதிரிதான். தங்களோட ஃபீல்ட்ல டாப்ல இருந்து பல சாதனைகள் செஞ்சிருக்காங்க. ஆனாலும் இந்த ரெண்டு பேரும் என்ன சொன்னாலும், சொல்லலைன்னாலும், செஞ்சாலும், செய்யலைன்னாலும் குத்தம்!

ஃபைனல்ஸ்ல சச்சின் அவுட் ஆனப்ப என் ஃப்ரெண்ட்ஸ் சில பேரே கூப்ட்டு திட்டினாங்க.. அட.. கவலைப்படாதீங்கப்பா.. இன்னும் நாலு விக்கெட் விழுந்தாலும் ஜெயிக்கும்ன்னேன். சச்சினை நம்பி மட்டுமே இருக்கற டீம் இல்ல இது.

யோசிச்சுப் பாருங்க.. எதிரணி எப்படி வியூகம் அமைச்சிருப்பாங்க. சச்சின், சேவக்கை தூக்கிட்டா கப்பைக் கடத்தீட்டுப் போய்டலாம். மிடில்ல யுவராஜை கழட்டிவிட்டா போதும்’ இப்படித்தானே நினைச்சிருப்பாங்க. அவங்க நெனைச்சே பார்க்காத காம்பீர் ஆடினது அன்னைக்கு சர்ப்ரைஸ். அதே மாதிரி, விராட் கோஹ்லி அவுட் ஆனதும் யுவி வந்து சடார்னு ஒரு விக்கெட் விழுந்தாலும் கொஞ்சம் கஷ்டமா போயிருக்கும். அதான் சடார்னு ஒரு டவுன் முன்னாடி வந்து மிரட்டீட்டாரு தோனி.

அந்த முடிவு சரியா அமைஞ்சு மேட்ச் ஜெயிச்சதால ஓகே. இல்லைன்னா? தோனி பேசும்போது சொன்னது செம! ‘ஏன் அஸ்வினுக்கு பதிலா ஸ்ரீசாந்த்? ஏன் நீ ஒரு டவுன் முன்னாடி இறங்கின’ங்கறா மாதிரி கேள்விகள் வரக்கூடாதேன்னு பொறுப்பா ஆடினேன்னு சொன்னாரு.

சச்சின் ரிடயர்மெண்டாம்! அடப்பாவிகளா.. அதுக்கு வேலையே இல்லையே.. இத்தனை வருஷமா ஆடிகிட்டிருந்தாலும், பாருங்க.... இந்த சீரிஸ்லயும் சொச்ச ரன் வித்யாசத்துல இரண்டாமிடம் பிடிச்சிருக்காரு. சச்சின் சிங்கிள்ஸ் எடுக்கறதையும், பவுண்டரியைத் தடுக்கறதையும் பார்த்தா வயசு தெரியுது உங்களுக்கு?




இந்த வெற்றில சச்சினுக்கு கண்டிப்பா பங்கிருக்கு. அவருக்கு நம்மளால கோடி, லட்சமெல்லாம் தரமுடியாது. எனக்காக ஒரே ஒரு உறுதிமொழியைத் தாங்க.

சச்சின் அடிச்ச செஞ்சுரி 48. அதுல இந்தியா தோத்தது 13. பல முறை சொல்லியாச்சு. அடிக்கடி நூறு அடிக்கறதால, தோக்கற மேட்ச்தான் உங்களுக்கு வலியா நினைவில இருக்கு. அதுவும் சமீபமா சச்சின் செஞ்சுரி போட்டா மேட்ச் தோக்கும்ன்னு சொல்றவங்க அதிகமாய்ட்டு வர்றாங்க. அப்படி ஒரு எண்ணமிருந்தா இன்னியோட விட்ருங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் அப்டி பேசினா வாய்லயே குத்துங்க..

யுவராஜ், ஜாகிர்ன்னு இன்னும் பலபேரைப் பத்தி பலதும் எழுதலாம். சச்சினைத் தூக்கி தோள்ல வெச்சுட்டு சுத்தினாங்க பாருங்க... எவ்ளோ முக்கியமான தருணம் அது.

ஒரு விஷயம் தெரியுமா? 21 வருஷமா விளையாடறாரே தவிர, பெரிய டோர்ணமெண்ட் கப் எதுவும் சச்சின் கைல வாங்கிப் பாத்ததில்லை. அதாவது 4, 5 டீமுக்கு மேல விளையாடற டி20 கப், ஐ பி எல், சாம்பியன்ஸ் ட்ராஃபின்னு எதுவும் சச்சின் இருக்கறப்ப ஜெயிச்சதில்லை. அவ்ளோ தூரம் விளையாண்டு, உழைப்பைக் கொட்டியும் இவருக்கு சரியான டீம் மேட்ஸ் இந்த தடவைதான் அமைஞ்சிருக்கும்பேன் நான். அந்த வெறிதான் நேத்து. சச்சின் கைல கப்பை கொடுத்த ஒவ்வொருத்தரையும் நான்  பாராட்டுகிறேன் .

------------------

அடுத்த அதிரடி ஐ பி எல் ஆரம்பம். வழக்கம்போல நான் CSK பக்கம்.

ஆனா - கீழ இருக்கற மாதிரி சூழல்கள்ல மட்டும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். அப்ப மட்டும் நான் க்ரிக்கெட்டின் ரசிகன்!





நீங்க IPLல யார் பக்கம்?

Saturday, April 2, 2011

விடுவோமா நாங்க அசத்தி போட்டோம்ல


















Friday, April 1, 2011

வாங்கடே ஸ்டேடியம்

நாளை ...,