Sunday, April 3, 2011

1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்

1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்




1983 மற்றும் 2011 - இந்த வருடங்களுக்கு உள்ள சிறப்பு அம்சம், நமது இந்திய அணி கிரிக்கெட் தொடரில்,உலககோப்பை கோப்பையை வென்றதுதான்.

இதை தவிர, மேலும், சில நம்ப முடியாத சிறப்பு அம்சங்கள் இந்த இரண்டு வருடங்களுக்கு இடையே உள்ளன.

முதலில், நமது இந்திய அணி கோப்பையை வென்ற வருடங்கள் மட்டுமே வேறு.

இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு இதே ஏப்ரல் 2 , சனிக்கிழமை அன்றுதான் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி, தனது முதல் உலககோப்பையை வென்றது.

1983 மற்றும் 2011 , இந்த இரண்டு வருடங்களின் முதல் நாள், அதாவது ஜனவரி முதல் தேதி, சனிக்கிழமைதான்.

1983 மற்றும் 2011 , இந்த இரண்டு வருடங்களின் கூட்டுத்தொகை 2,( 83 & 11 ).

கோப்பையை வென்ற இந்த இரண்டு முறையும், இந்திய அணி குருப் 'பி' பிரிவில், இரண்டாம் இடத்தில் இருந்தது.

இரண்டு வருடங்களிலும், நமது அணி, ஆறு ஆட்டங்களில் கலந்துகொண்டு, அதில் நான்கில் மட்டுமே வென்றுஇருக்கிறது.

1983 மற்றும் 2011 , இந்த இரண்டு உலககோப்பை தொடர்களிலும், கடைசி லீக் ஆட்டங்கள் நடந்த நாள் : மார்ச், 20. (20 - 03 - 1983 மற்றும் 20 - 03 - 2011 ).

கோப்பையை வென்ற இந்த இரண்டு தொடர்களிலும், அரையிறுதி சுற்றுக்கு முன்னால் நமது அணி மோதிய நாடு , ஆஸ்திரேலியா.

இந்த இரண்டு தொடர்களிலும், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஒரு அணி மற்ற அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது.
1983 ஆம் வருடம் நடந்த அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி, ஜிம்பாப்வே அணியையும், இந்த வருடம் இலங்கை அணி, இங்கிலாந்தையும் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கின்றன.


இந்தியா,உலககோப்பை வென்ற இந்த இரண்டு தொடர்களுக்கும் இத்தனை ஒற்றுமைகள் எப்படி வந்தன? ? இதை விதி என்பதா? நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு என்று கூறுவதா? தாமாகவே எப்படி இந்த அம்சங்கள் அமைந்து இருக்கின்றன??

No comments:

Post a Comment