Wednesday, April 27, 2011

நாடாளப்போகும் நல்லவர்கள்..தமிழகம்: 125 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்!


  "நடைபெறும் 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பிரபல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 679 வேட்பாளர்களில், 125 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றும் தனியார் சேவை அமைப்பான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் சார்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த ஆட்சி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் 2011 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (ஏப்ரல் 13) நடைபெற உள்ளது. தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 2,773 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் சுயேட்சைகள் அல்லாத பிரபல அரசியல் கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக, அதிமுக, தேமுதிக, பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனுக்குச் சமர்ப்பித்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் 679 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத் தகவல்கள் டெல்லியிலிருந்து செயல்படும் ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்டுள்ளது.
திரட்டப்பட்ட தகவல்கள், இந்த அமைப்பின் சார்பு நிறுவனமான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. வெளியான தகவல்களிலுள்ள 679 வேட்பாளர்களில் 125 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் தெரியவந்துள்ளன.
வெளியிடப்பட்ட தகவல்களில் கிரிமினல் வழக்கு நிலுவையிலுள்ள வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
திமுக  - 119 வேட்பாளர்களில் 111 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிமுக - 160 வேட்பாளர்களில் 144 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 43 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காங்கிரஸ் - 63 வேட்பாளர்களில் 54 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாஜக - 169 வேட்பாளர்களில் 19 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தேமுதிக - 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாமக - 14 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் - 10வேட்பாளர்களில்  3 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

No comments:

Post a Comment