Tuesday, April 19, 2011

தேர்தலில் ஜெயலலிதா வென்றால் ...அல்லது தோற்றால்....




நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு வேளை  அண்ணா.தி.மு.க.ஜெயித்தால்.....


நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கருணாநிதியின்
 பாசிச ஆட்சியை அகற்றி மீண்டும் அனைத்திந்திய
 அண்ணா.திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைக்க
 வாய்ப்பளித்துள்ளார்கள்.நான் பிரச்சாரத்திற்க்காக போகும்
 இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு அன்பு 
சகோதரியான எனக்கு ஆதரவு தெரிவித்த போதே 
எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம்,
 மணல்கொள்ளை, கேபிள் டி.வி .ஆதிக்கம், அரிசி கடத்தல்
, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கருணாநிதியின் கொடுங்கோல்
  ஆட்சியில் சிக்கித்தவித்த மக்களுக்கு ஒரு விடிவு
 என் மூலம் ஏற்பட்டிருக்கிறது...இவ்வளவு பெரிய
 வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த தேர்தல் 
ஆணையத்திற்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.
மிரட்டலுக்கு அஞ்சாமல் மிகவும் நியாயமாக தேர்தல்
 நடக்க அவர்கள்தான் காரணம். எங்களுக்கு வாக்களித்த 
 மக்களுக்கு நன்றி.....கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி....
அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் 
எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...


ஒருவேளை தோற்றால்.....



ஸ்பெக்ட்ரம் மூலம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு 
செயற்கையான  ஒரு வெற்றியை பணம் கொடுத்து 
வாங்கியுள்ளார்கள் கருணாநிதியும், அவர் கட்சியினரும். 
தமிழ்நாடு முழுவதும் ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் 
என்று பத்தாயிரம் கோடி ரூபாயை வாரி 
இறைத்திருக்கிறார்கள். எங்களுக்கு சாதகமாக 
நடப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு
 தி.மு.க-விற்கு சாதகமாக நடந்து கொண்ட தேர்தல்
 கமிசனுக்கு என் கண்டனத்தை தெரிவித்து
 கொள்கிறேன். தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 
இடையே இருந்த ஒரு மாதத்தில், நிறைய இடங்களில் 
வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டுள்ளது. ஒரு மா
த இடைவெளி இருந்த போதே சுதாரித்து இருக்கணும்.
தேர்தல் ஆணையத்தை நம்பி மோசம் போயிட்டோம் 
முக்கியமாக  தேர்தல் முடிந்து சில நாட்களில்
 மு.க அழகிரிஅமெரிக்காவிற்கு ரகசியமாக
 சென்று வாக்குப்பதிவு எந்திரத்தில் எங்களுக்கு விழுந்த
 ஓட்டுக்களை உதய சூரியன் சின்னத்தில் மாற்றும்
 வசதியுள்ள புதிய நவீன ரிமோட்டை அங்குள்ள 
வல்லுனர்கள் மூலம் தயாரித்து எடுத்து  வந்துள்ள 
தகவல் எனக்கு சுப்ரமணியம்சாமி மூலம் கிடைத்தது.
அந்த நவீன ரிமோட் மூலம்  வீட்டிலிருந்த படியே எல்லா
 வாக்குகளையும் தி.மு.க சின்னத்தில் திருப்பி 
விட்டிருக்கிறார் அழகிரி .அதற்காக சுமார் ரெண்டாயிரம் 
கோடி ரூபாயை ஹவாலா மூலம் கை மாற்றியுள்ளார்.
மேலும்,விஜயகாந்த் குடித்துவிட்டு செய்த பிரச்சாரமே 
எங்களுக்கு எதிராக மாறிவிட்டது.எதற்கும் 
கலங்காமல் களப்பணி ஆற்றுங்கள்...
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி நமதே... 
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் 
முடிவில் தர்மமே வெல்லும். ஜெயிற்றால்
 கோட்டை..தோற்றால் கொடநாடு என்னும் 
எனது கொள்கையின் படி இப்போது கொடநாடு செல்கிறேன்.

அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...

No comments:

Post a Comment